பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக கூறப்படும் 98 கொள்கலன்களில் பயன்படுத்தப்பட்ட படுக்கை மெத்தைகள் அடங்கிய உபகரணங்கள் நேற்று 8 ஆம் திகதி சுங்க திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொருட்களில் தரைவிரிப்புகள் அதேபோல பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன் உறைகள் மற்றும் படுக்கையறைகளுக்கான உபகரணங்கள் இதில் அடங்கியிருந்தன.
இவை அனைத்தும் இலங்கையின் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டு இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் இதனை நேற்று கைப்பற்றி இருக்கிறது
இந்த பொருட்கள் அனைத்துமே மிகவும் பயன் படுத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன.
இவை முழுமையாக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்று அல்லாமல் மிகவும் பழுதடைந்த அல்லது ஒரு குப்பைக் சமமான அளவில் அங்கு இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது
102 கொள்கலன்களில் இந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் 98 கொள்கலன்கள் மாத்திரமே நேற்று சுங்க திணைக்களத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டன.
இவை அனைத்துமே இலங்கையின் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக சுங்க திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் அதேபோல அமைச்சும் மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல இந்த பொருட்களை இறக்குமதி செய்த இலங்கையின் நிறுவனம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து தெரிவிக்க