இலங்கையை “தட்டம்மை”( measles ) நோயற்ற நாடாக உலக சுகாதார மையம் இன்று பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பிள்ளைகளை “தட்டம்மை” நோயில் இருந்து பாதுகாத்துள்ளதாக உலக சுகாதார மையத்தின் பிராந்திய பணிப்பாளர் பூனம் கெட்ராபல் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை “தட்டம்மை” அற்ற நாடு என்ற பிரகடனத்துக்கு முன்னர், உலக சுகாதார மையத்தின் சுயாதீனக்குழு இலங்கையில் முழுமையாக ஆய்வை மேற்கொண்டது அதனை உறுதிப்படுத்திக்கொண்டது.
இதற்காக இலங்கையின் சுகாதார பிரிவினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே தட்டம்மையை ஒழித்த, ரூபெல்லா என்ற ஜேர்மன் தட்டம்மையை கட்டுப்படுத்திய தென்கிழக்காசிய நாடுகளான பூட்டான், மாலைத்தீவு, மற்றும் திமோர் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இணைந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க