உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டில் வறட்சி காரணமாக சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் வறட்சி காரணமாக 17 மாவட்டங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்

பருவப்பெயர்ச்சி மலை பெய்யாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் , யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம் உட்பட்ட இடங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதிகளுக்கு குடி நீரை விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவைத்துள்ளார்.

இவரின் தகவலின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள எண்ணிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 21000 பேர், கிளிநொச்சியில் 5000 பேர், முல்லைத்தீவில் 12000 பேர், மன்னாரில் 18000 பேர், வவுனியாவில் 39 பேர், திருகோணமலையில் 2457 பேர், அனுராதபுரத்தில் 915 பேர், புத்தளத்தில் 10431 பேர், மாத்தளையில் 42399 பேர், பொலநறுவையில் 10435 பேர்,மட்டக்களப்பில் 23518 பேர், கேகாலையில் 160 பேர், மொனராகலையில் 350 , இரத்தினபுரியில் 3041 பேர், அம்பாறையில் 11500 பேர் மற்றும் அம்பாந்தோட்டையில் 2141 பேர் என இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சக தெரிவித்திருக்கின்றது.

கருத்து தெரிவிக்க