பாகிஸ்தானைச் சேர்ந்த 330 கிலோ நிறையுள்ள நூருல் ஹாசன் (55) என்பவர், உடல் நிலை பாதிப்பு காரணமாக தனக்கு சிகிச்சை அளிக்கும்படி இராணுவத் தலைமை தளபதி , ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வாவுக்கு சமூக வலைத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இராணுவ ஹெலிகப்டர் மூலம் லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த காரணத்தால், ஹாசனின் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தினர். இதில் ஒக்ஸிசன் செல்லும் குழாய்கள் உடைத்தெறியப்பட்டதில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நூருல் ஹாசனும் மற்றுமொரு நோயாளியும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க