செவ்வாய் கிரகத்துக்கு முதல் முறையாக விண்கலம் அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்கலத்தை தயாரித்து முடித்து விட்டதாகவும், அடுத்த ஆண்டு யூலை அல்லது ஓகஸ்ட் மாதத்தில் விண்கலத்தை அனுப்ப தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி, அங்கு உயிரினம் வாழும் அறிகுறிகள் உள்ளதா?, மனிதர்கள் வாழக்கூடிய வகையில் நிலமை மாறுமா?, போன்ற விடயங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.
விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் ஆகும். அப் பயணம் வெற்றிகரமாக அமைந்தால் 2021 ஆம் ஆண்டில் அந்த விண்கலம் தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
கருத்து தெரிவிக்க