உள்நாட்டு செய்திகள்புதியவை

சீனாவின் பரிசுக்கப்பல் இலங்கைக்கு வந்தது

இலங்கை கடற்படையின் செயற்திறன்களை அதிகரிப்பதற்காக 2019 ஜூன் 05 ஆம் திகதி சீனாவினால் இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட பி 625 கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் மரியாதைக்குரிய கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கையில் உள்ள சீனாவின் தூதர் செங் சூயுவான், கடற்படைத் தளபதி பிரதி அட்மிரல் பியால் டி சில்வா, கடற்படையின் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகெட்டென்ன, துணைப் பணியாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, மூத்த அதிகாரிகளுடன் இணைந்து கடற்படைத் தளபதி கப்பலில் ஒரு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் கப்பலின் செயற்திறன் மற்றும் செயல்பாட்டு அம்சங்களை மேற்பார்வையிடப்பட்டது.

1994 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் 112 மீற்றர் நீளமும் 12.4 அகலமும் 2,300 தொன் கொள்திறனும் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

18 அதிகாரிகள் மற்றும் 92 மாலுமிகள் அடங்கிய குழுவினர் கப்பலில் பணியாற்றி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க