ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கோரினால் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.
“அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை எந்த நீதிமன்றத்திலும் விசாரணை செய்ய முடியாது” என்று பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடுவது “பயனற்ற நடவடிக்கை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஊடகவி யாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீட்டிக்க எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் எமது கட்சி கண்டிக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தவும், மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க