தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சி ஐக்கிய தேசிய கட்சி அல்ல என, சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், சஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் என்றும் அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க