உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

“நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்”- விழிப்புணர்வு செயற்திட்டம்

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணமாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7 மணிமுதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரண மாணவர்களின் இவ்விசேட செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்களின் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது,

பாடசாலை வளாகம் மற்றும் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியின் டிப்போ சந்தி முதல் கரடிபோக்கு சந்தி வரையாக இரு மருங்கிலும் உள்ள உக்காத பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டது.

சுமார் 1 மணிநேரம் குறித்த செயற்திட்டம் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாணவர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

சுற்றாடல் பாதுகாப்பு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

சாரண மானவர்களின் செயற்பாடு தொடர்பில் புத்திஜீவிகள் மற்றம் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க