நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பொகவந்தலாவ பகுதிக்கு களப்பயணத்தை மேற்கொண்டு விவசாயத்தை மேற்கொள்ளும் மக்கள் விவசாய உற்பத்தி பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள கூடிய மத்திய நிலையமொன்றை அமைக்கவுள்ளதாக தெரிவித்த்துள்ளார்.
மேலும், பொகவந்தலாவ நகரை அண்டி சிறுவர் பூங்கா ஒன்றையும்,நோர்வூட் நகருக்கு அருகாமையில் தேசிய சத்துணவு விற்பனை நிலையம் ஒன்றையும் அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு சுயதொழிலிலை ஊக்குவிக்கும் பொருட்டு இளைஞர்களுக்கு சிறிய கடைத்தொகுதிகளையும் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவ பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க