சினிமா

‘ஆடை’ ட்ரைலரில் அசத்தும் அமலாபால்

நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் நேற்று முன் தினம் வெளியாகியுள்ளது.

நடிகை அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கதையின் பலமும், அமலாபாலின் தோரணையும் இப்படத்தை வெற்றி பெற செய்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

ஆடை படத்தை மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கி வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

மிக வித்தியாசமான முறையில் கதை உருவாகி இருப்பதாக இந்த படத்தில் ட்ரைலர் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க