சினிமா

நயன்தாராவின் ‘லவ் எக்‌ஷன் டிராமா’

நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘லவ் எக்‌ஷன் டிராமா-வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் நிவின் பாலி நடித்து மாபெரும் வெற்றியடைந்த படம் பிரேமம்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இதேபோன்ற கதையில், நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு லவ் எக்‌ஷன் டிராமா. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த படத்தை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார். அஜு வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சுவரொட்டி வெளியாகி உள்ளது.

அதில், நயன்தாரா கல்லூரி படிக்கும் பெண்ணை போல சித்தரிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க