இலங்கையில் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
2017ஆம் ஆண்டு இந்த போதை பொருள் குற்றங்கள் 2845 இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு 4387 ஆக அதிகரித்திருக்கின்றது.
இதேவேளை ஏனைய குற்றங்களை பொறுத்தவரையில் குற்றங்களின் எண்ணிக்கைகள் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் போதைப் பொருளுக்கு அப்பால் சென்று பார்க்கின்ற போது 2017ஆம் ஆண்டில் 33134 ஏனைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
எனினும் அது 2018ஆம் ஆண்டு 31968 ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த போதை பொருள் சமந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது அதனை கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கருத்து தெரிவிக்க