அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள சோபா[SOFA ] என சொல்லப்படுகின்ற உடன்படிக்கை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இலங்கையை பொருத்த வரை எதிர்க்கட்சி தற்போது இந்த விடயத்தை கடுமையான விமர்சனத்திற்குட்படுத்தி அரசாங்கத்துக்கு விமர்சனத்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு விடயங்களில் முக்கிய பங்காக கருதப்படும் சாலி போர்ட்[SALLY PORT] என்ற நிறுவனம் இலங்கையின் பாதுகாப்பு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் குறித்த நிறுவனம் இலங்கையின் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றது.
அதனடிப்படையில் தமது நிறுவனத்துக்கு இந்த பாதுகாப்பு பிரிவுகளிலிருந்து முழுநேரம் அல்லது பகுதி நேர பணியாளர்கள் தேவை என்ற ஒரு விளம்பரத்தையும் இந்த சாலிபோர்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது
குறித்த நிறுவனம் பெரும்பாலும், இலங்கையினுள் உள்ளக பாதுகாப்பு விடயங்களிலும் தமது செல்வாக்கை செலுத்தியுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க