மஸ்கெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை மின்னா தோட்டத்திற்கு செல்லும் சுமார் 2 .5 கி .மீ பாதை செப்பனிடும் வேலைத்திட்டம் நேற்று மாலை 4 .00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பாதையானது கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் 05ம் திகதியன்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் .திலகராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாக சீர் செய்ய படாத நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதை சீரின்மையால் இப்பிரதேச மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் ஊடகங்கள் இது குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியிட்டிருந்தது.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தரால் 1/10/2018 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த பாதையை விரைவில் சீர் செய்து தருவதாக உறுதி வழங்கியிருந்தார் .
அதற்கமைய நேற்றைய தினம் பாதை செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க