இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு பிரதமர் காரியாலயம் கடும் சொற்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் அமெரிக்காவுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை அதேபோல செய்துகொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக தெளிவு தேவை என்ற அடிப்படையில் கடிதம் ஒன்றை பிரதமர் காரியாலயத்திற்கு அனுப்பியிருந்தது.
இந்த கடிததிற்கு பிரதமர் காரியாலயம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றது.
இந்த பதில் கடிதம் பிரதமரின் செயலாளர் ஏக்க நாயக்கவினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அரசியல் மயப்படுத்த பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை வர்த்தக சம்மேளனமும் இணைத்துக்கொள்ளப்பட்டதை இந்த கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு விட்டு தற்போது இந்த உடன்படிக்கைகள் தொடர்பான தெளிவு தன்மை தேவை என்ற ஒரு விடையத்தை இலங்கை வர்த்தக சம்மேளனம் எழுப்பியது கேள்விக்குறியாக இருக்கின்றது என, பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சோபா எனப்படும் படைகள் தொடர்பான உடன்பாடு இன்னும் அமைச்சரவைக்கு பரப்படுத்த படவில்லை என்றும் அமைச்சரவைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை என்றும் அது தொடர்பான எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் காரியாலயம் இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க