தமிழர்கள் தமது கலை, கலாசார, பண்பாடுகளை கட்டிக்காத்து தமிழர்களாக ” வாழ்வதற்கு வழிசமைத்து தந்த தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனை விமர்சிக்கும் தகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இருந்தது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து மிகுந்த வேதனையை அளிப்பதோடு இவ்வாறான ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தகுதியற்றவர் என்பதனையும் தெரிவிக்கிறேன்.
குறிப்பாக தமிழர்கள் கலை, கலாசாரம், பாரம்பரியம், ஒழுக்கம் உள்ளிட்டவிழுமியங்களோடு வாழ்வதற்கு வித்திட்ட வழிசமைத்துக் கொடுத்த ஒரு ஒப்பற்ற தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய மக்கள் போதைப் பொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்காக உழைத்தவர்.
அவ்வாறான ஒரு தலைவரை ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளமை வேதனைக்குரியது” எனத் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க