வெளிநாட்டுப் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு, 11 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இப்பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதிலும் ஜே.வி.பியும், மஹிந்த அணியும் தீவிரம் காட்டிவருகின்றன.
மறுபுறத்தில் பிரேரணையை முறியடிப்பதற்கான முயற்சியில் பிரதமர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதன்பிரகாரமே இவ்வாரம் திங்கள் முதல் (08) வெள்ளிவரை (12) வெளிநாடடுப் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமரால் பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இக்காலப்பகுதியில் கொழும்பிலேயே முகாமிட்டு தங்கியிருப்பார்கள்.
கருத்து தெரிவிக்க