களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓவியா, எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்று கூறியிருக்கின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2விலும் நாயகியாக நடித்துள்ளார்.
சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் குறித்த படத்தில் நடித்துள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் அவரது திருமணம் குறித்து கேள்வியெழுப்பிய போது அதற்கு அவர் நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்றும் தனியாக இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க