சினிமா

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் அசுரன் படம் அக்டோபரில் ரிலீஸ்

வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரன் படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

வடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன்.

பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கருணாஸ் மகன் கென் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

தனுஷ் அப்பா மகன் என்ற இரு பாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அக்டோபர் இரண்டாம் திகதி அசுரனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற அக்டோபர் 17 ஆம் தான் வெற்றிமாறன்- தனுஷின் கூட்டணியில் வடசென்னை வெளியானது.

கருத்து தெரிவிக்க