முல்லைத்தீவு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றவர்கள் தமக்கான நிரந்தர நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை ஒட்டுசுட்டானில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்
தொடர்ச்சியாக கற்பித்துக் கொண்டிருந்த தாங்கள் இடையிலே அனுப்பப்பட்ட சுற்று நிருபத்துக்கு அமைவாக தாங்கள் கற்பிக்கும் நடவடிக்கையை நிறுத்தியதாகவும் இன்னும் சிலர் தொடர்ந்தும் கற்பித்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த வகையிலே துணுக்காய் கல்வி வலயத்தில் 30 தொண்டர் ஆசிரியர்களும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 4 தொண்டர் ஆசிரியர்களுமாக மாவட்டத்தில் 34 தொண்டர் ஆசிரியர்கள் அண்மையில் வழங்கப்படட நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்று தருமாறு கோரியும் இந்த சந்திப்பு இடம்பெற்றது
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தங்களுடைய தமிழரசுக்கட்சியின் உடைய 16 வது மாநாட்டிலேயே இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் இந்த ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்காக தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோன் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க