வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தான் இராணுவத்தை விடுதலை செய்தது தலிபான் :

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் நாட்டில் அரசியல் குழப்பங்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள்,  இராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடந்த சண்டையில் குயிஷ்தேபா பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதும் இராணுவம் பின் வாங்கியது. அவரகளில் 42 வீரர்களை சிறைப்பிடித்தனர். பின்னர் கடந்த புதன்கிழமை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றாலும் மறுபக்கத்தில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க