வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் கடும் மழை : 8 இலட்சம் பேர் வெளியேற உத்தரவு

ஜப்பானில் தென் மேற்கு பகுதியில் ககோஷமா நகரில் கடந்த ஒரு கிழமையாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரை 40 மி.மீ மழை பெய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் 350 மி.மீ மழை பெய்யக் கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடைவிடாத கடும் மழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் , ககோஷமா நகரைச் சேர்ந்த 8 இலட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளில் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க