திருகோணமலையில் ஐந்து மாணவர்களை சுட்டுக் கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதம நீதவான் M.H.M. ஹம்சா முன்னிலையில் விசாரணைக்காக இன்று புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 விசேட அதிரடிப்படையினருக்கும் எதிராக 15 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமானளவு சாட்சியங்கள் இல்லாதமையால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க