விடுதலைப் புலிகள் போதைவஸ்து வியாபாரம் செய்தே யுத்தம் நடத்தினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமை தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த பாரிய துரோகமாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு ஜனாதிபதி மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வட கிழக்கிற்கு பிரச்சாரம் செய்ய சென்ற மைத்திரிபால சிறிசேன, விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்தது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆகவே, அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய தமிழ் மக்கள் அவருக்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்று போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்வில் விடுதலைப் புலிகள் போதைப் பொருள்களை விற்று யுத்தம் புரிந்தார்கள் என்று கூறியிருப்பது தமிழ் மக்களுக்கு அவர் இழைத்திருக்கும் பாரிய துரோகமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க