உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எதிர்வரும் 2019 சிறுபோக அறுவடைநெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விசேட கூட்டம் மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்.மாணிக்கம் உதய குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இவ்வருட பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள 23 இலட்சத்தி 11300 ஆயிரம் தொன் நெல்லை விற்பனைசெய்ய அரசாங்கம் அனுமதி வழங்காததால் ஏற்பட்டுள்ள களஞ்சியதட்டுப்பாட்டினை போக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பிரச்சனைக்கு தீர்வாக பிரதேசசெயலக பிரிவுகளில் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை முதல் கட்டமாக பயன்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் 2018-2019 பெரும்போக நெற்செய்கைக்கு இம்மாவட்டத்துக்கு தேவையான உரமானியத்தை முன்கூட்டியே ஆயத்தம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரட்சியால் பாதிக்கப்பட்ட 8069 ஏக்கர் நெல்வயலுக்குரிய 3178 விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுப்பணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் மழைநீரை வீண்விரயம் செய்யாது தேக்கிவைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விசேடகூட்டத்தில் மாவட்டமேலதிக அரசாங்க அதிபர்.திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், நெல் சதைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் எம்.எல்,டீ.எஸ் கருணாதிலக, பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க