உள்நாட்டு செய்திகள்

‘சோபா’ குறித்து ஆராய இரு குழுக்கள் – மஹிந்தவுடன் நாளை பேச்சு!

அமெரிக்காவுடன் செய்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள ‘சோபா’ உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக,  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்களும், நாளை அவரை சந்திக்கவுள்ளன.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சோபா’ உடன்படிக்கையில் , அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நாட்டுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான இந்த குழுவில்,  வெளிநாட்டு உறவுகள் மற்றும் கொள்கைசார் நிபுணர்கள் நால்வர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவது குழுவில் மூன்று ஜனாதிபதி சட்டவாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, இந்த உடன்பாட்டினால்,  நாட்டின் சட்டத்துறையில் ஏற்படக் கூடிய தாக்கங்களை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளது.

ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த இரண்டு குழுக்களும் மஹிந்தவால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க