உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக சுஜீத் பிரியந்த பதவியேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த பதவியேற்றார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு நேற்று மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள கல்முனை தலைமையக பொலிஸ் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,பொலிஸார் மற்றும் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி என்பவர் நாரேன்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க