அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் தமது அபிவிருத்திப்பணிகளை நிறைவுசெய்யவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை தாமதித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மத்தியிலும் அபிவிருத்திப்பணிகளை முன்கொண்டு செல்வதற்கான வலு அரசாங்கத்திடம் உள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.
எனவே அமைச்சர்கள் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் தமது நிதியொதிக்கீட்டில் வரும் அபிவிருத்திப்பணிகளை நிறைவுசெய்யவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை பிரதமரின் இந்த உத்தரவு தேர்தல்களை மையமாகக்கொண்டது என்று அரசியல்தரப்புக்கள் கூறுகின்றன.
கருத்து தெரிவிக்க