உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்று பூரண சூரிய கிரகணம்

பூரண சூரிய கிரகணத்தை பல நாடுகளில் இன்று காண முடியுமென, நாசா ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டின் பின்னர் பூரண சூரிய கிரகணம் இன்று தென்படவுள்ளது.

இந்த சூரிய கிரகணமானது பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு தெளிவாக தென்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இவ்வாறான பூரண சூரிய கிரகணம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் தோன்றுவதால், சூரியனின் ஒளி சந்திரனால் மறைக்கப்பட்டு சந்திரனின் நிழல் பூமியில் விழுவதால் குறித்த பிரதேசம் இருளாக காட்சியளிக்கும். இந்நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும்.

கருத்து தெரிவிக்க