முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தம்முடன் தொடர்புக்கொண்டு தொலைபேசியில் உரையாடிய விடயத்தில் இராணுவத் தளபதி பொய் கூறுவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ரிசாத் பதியூதீன் அழுத்தம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எனினும் தாம் கைதுசெய்யப்பட்டவர் குறித்து அறிந்துக்கொள்ளவே இராணுவத்தளபதியுடன் தொடர்பு கொண்டதாக ரிசாத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரிசாத் பதியூதீன், கைதுசெய்யப்பட்டவரை விடுவிக்குமாறு தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று இராணுவத்தளபதியும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரிசாத் பதியுதீனின் தொலைபேசி அழைப்பை அழுத்தம் கொடுத்த வகையிலும் எடுத்துக்கொள்ளலாம் என்று இராணுவத்தளபதி தெரிவித்த நிலையிலேயே எதிர்கட்சி ரிசாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தது.
எனினும் தற்போது அந்த அழைப்பு அழுத்தம் மிக்கதாக இல்லை என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பொய்க்கூறுவதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க