வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை : மீறினால் 3 இலட்சம் யென் அபராதம்

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு பொது இடங்களில் புகை பிடித்தலை தடுக்கும் சட்டம் , நேற்று அமுலுக்கு வந்தது. இதன்படி பாடசாலைகள், வைத்தியசாலைகள் அரச அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் புகை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேற்கூறிய அனைத்து இடங்களிலும்  இந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அதன் நிர்வாகிகளுக்கு  5 இலட்சம் யென் அபராதமாக விதிக்கப்படும். அதேபோல் தடையை மீறி புகை பிடிப்பவர்கள் 3 இலட்சம் யென் அபராதமாக செலுத்த வேண்டும்.

கருத்து தெரிவிக்க