அழகு / ஆரோக்கியம்

யோகாவின் மகத்துவம்

மகரிஷி பதஞ்சலியின் கூற்றுக்கு இணங்க, ஒருவருடைய மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலைப்படுத்துவதாகும்.யோகாசனம் என்பது இனம் , மதம் , வயது , ஆண் , பெண் , நாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பொதுவானதாகும்.

உடல். மனம், அறிவு, உணர்வு, மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு வழி வழியாக வந்த ஒழுக்க நெறியாகும். யோகா எட்டு அங்கங்களை கொண்டது. அவை,

1. இயமம்

(பின்பற்ற வேண்டியவை)
பக்கம் சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை, மிதவாதம், விவேகமற்ற தன்மை, உரிமை கொண்டாடாதிருத்தல்.

2.நியமம்
(கவனிக்க வேண்டியவை)

புனிதம், போதுமென்ற மனம், எளிமை, கற்றல், கடவுளிடம் சரணாகதி

3. ஆசனம்
இதன் பொருள் அமர்தல் அல்லது உடல் நிலை.

4. பிராணாயாமம்
மூச்சை அடக்குதல், வாழ்க்கை ஒட்டத்தை கட்டுப்படுத்தல்

5. ப்ரத்யாஹரம்
புற உலக பொருட்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.

6. தாராணை
மனதை ஒருநிலைப்படுத்துதல்.

7. தியானம்
தியானத்துக்கு எடுத்துக் கொண்ட பொருளின் உண்மைத் தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.

8. சமாதி
தியானிக்கும் பொருளுடன் உணர்வுகளை இணைத்து விடுதல்.

கருத்து தெரிவிக்க