வெளிநாட்டு செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ஈரானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருவதாக குற்றம் சாட்டி , அந்நாட்டின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்கள் இராணுவ நிலைகளை குறி வைத்து தான் வான் தாக்குதலை நடத்துகிறது என குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் சிரிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் ‘ கடந்த ஞாயிறன்று இரவு தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகரில் உள்ள வீடுகளின் மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலியாகி உள்ளதோடு, 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே வேளை 6 ஏவுகணைகள் நடு வழியில் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க