உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

மன்னார் மனிதப்புதைகுழி: மீண்டும் தடயவியல் அறிக்கைக்கு உத்தரவு

மன்னார் மனித புதைக்குழி விடயம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான தடயவியல் அறிக்கையை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளமையை அடுத்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட 29 சிறுவர்கள் உட்பட்ட 320 பேரின் மனித எச்சங்கள் தொடர்பில் அமரிக்க புளொரிடாவில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் வெளியான அறிக்கையின்படி, இந்த மனித எச்சங்கள், காலத்தால் நூற்றாண்டுகள் முந்தியவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதில் சந்தேகம் வெளியிட்டு மீண்டும் மன்னார் காவல்துறைக்கு ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மன்னார் நீதிவானும் ஜூலை 31க்கு முன்னர் தடயவியல் அறிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனிதப்புதைக்குழியின் எச்சங்களை களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மீட்டு அதன் தடயவியல் அறிக்கையையும் நீதிமன்றில் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க