தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினர் பதவி விலகப்போவதாக எச்சரித்துள்ளனர்.
சீனாவில் இருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை விலக்கிக்கொள்ளாதுபோனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக பணிப்பாளர் சபையினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் பணிப்பாளர் சபையின் சார்பில் அதன் தலைவர் பாலித அபேகோன், அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் சீன சிகரட்டுக்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதை அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த முடிவு, பொருளாதார மற்றும் சுகாதார ரீதியில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள சீன பணியாளர்களுக்காகவே இந்த அனுமதிப்பத்திரத்துக்கு இணங்கியதாக அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருப்பதை தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபையின் தலைவர் நிராகரித்துள்ளார்.
இலங்கையின் 1.5 மில்லியன் பேர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர்.
இவர்களுடன் ஒப்பிட்டு சீனாவின் பணியாளர்களை நோக்கும்போது அவர்கள் சிறு தொகையினர் என்பதையும் அபேகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க