பொது இடங்களில் இரு முறை உடல் நடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒசாகாவில் இடம்பெற்ற ஜி20 மாநாடு நிறைவடைந்த பின்னர் உடல்நிலை தொடர்பில் கேட்கப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாம் நலமுடன் இருப்பதாகவும், உடல் நடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உடல்நிலை சரியாகிவிடுவதாகவும் மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனுக்கு விஜயம்மேற்கொண்டிருந்த உக்ரைன் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளித்த போதும், மற்றொரு பொது நிகழ்ச்சியின் போதும், மெர்கலுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. இவருக்கு தற்போது 64 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க