விமல் வீரவங்ஸ 8 ஆம் வகுப்பு வரையில் மாத்திரமே படித்தவர் எனவும் அவர் உண்மையில் சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை விமல் வீரவங்ஸ முன்வைத்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ஸ சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் தற்போதைய அரசாங்கத்தின் தவறினால் அவர் வெளியில் உள்ளார்.
அவர் வீடமைப்பு அதிகார சபையின் பணத்தை தமது குடும்பத்திற்கு செலவழித்தவர்.தமது குடும்பத்தில் இடம்பெற்ற திருமணங்களையும் அந்த பணத்திலேயே நடத்தியுள்ளார்.
அவரின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சுகாதார அமைச்சர்குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க