பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் மீதும் குற்றம்சுமத்தப்பட்டதையடுத்து, கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு முன்பாக இவர்கள் இருவரும் முன்னிலையாகி சாட்சியங்கள் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து, இவர்கள் இருவர் மீதும் மேலதிக குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ள சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம் என உயர்மட்டப் பாதுகாப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்டார். அத்துடன், பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்து ஹேமசிறி பெர்ணான்டோ தானாக முன்வந்து விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க