விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

உலக கிண்ண கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திக்கின்றன.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் லீட்சில் நடக்கும் 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

எஞ்சிய 2 ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு இன்றைய ஆட்டம் நல்ல வாய்ப்பாகவே உள்ளது.

லண்டன் லார்ட்சில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

7 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் அவுஸ்திரேலியா, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க