முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் திரட்டி அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது.
முஸ்லிம் புத்திஜீவிகள் சிலரே இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் என்றும், அரசியல் கட்சிகளுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடிவருகின்றனர் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
” 21/4 தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. எனினும், முஸ்லிம் கட்சிகள் இணைந்து குரல் கொடுத்ததால் பாரிய அழிவிலிருந்து மீளக்கூடியதாக இருந்தது.
அத்துடன், தேரர் ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின்போதுகூட சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி கட்சிகள் முடிவெடுத்தன. இந்த ஒற்றுமை எதிரகாலத்திலும் நீடிக்கவேண்டும். எனவேதான், கூட்டணி அமைக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.” என்று முஸ்லிம் சமூகத்தை சார்ந்த புத்திஜீவியொருவர் தெரிவித்தார்.
இதற்கான பேச்சு இன்னும் வெற்றியளிக்கவில்லை. எதிர்காலத்தில் திட்டம் நிறைவேறும் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க