அழகு / ஆரோக்கியம்

விளாம்பழத்தின் மகத்துவம்

பழங்களிலேயே முதன்மையானது என அகத்தியர் சொல்லிச் சென்ற பழம் விளாம்பழம். காரணம் , மிகவும் மலிவாக கிடைக்கக் கூடியதும், அதிகளவு மருத்துவ குணங்களை தனக்குள்ளே கொண்டதும் விளாம்பழம். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து. விற்றமின் ஏ போன்றன அதிகம் நிறைந்துள்ளது.

விளாம்பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம். பித்தம் போன்றவற்றோடு தொடர்புடைய அத்தனை நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது.

தலைவலி, கண் பார்வை மங்குதல், காலையில் எழுந்ததும் மஞ்சள் நிறமாக சத்தி எடுத்தல், வாய்க் கசப்பு, தலைச் சுற்றல், உள்ளங்கை கால்களில் அதிகளவு வியர்வை ஏற்படுதல், சளி. இருமல். வயிற்றுப் பிரச்சனைகள், பித்தத்தால் ஏற்படும் இளநரை, நாக்கு மரத்துப் போதல், போன்றவற்றுக்கும் விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.

உடலில் ஏற்படும் கல்சிய குறைபாடு, தலைமுடி. உடம்பில் ஏற்படும் வறட்சிக்கும் சிறந்தது.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் விளாம்பழத்தின் சதையை எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து, இரவு முழுவதும் பனியில் வைத்திருந்து காலையில் எழுந்து சாப்பிட்டு வர பூரணமாக குணமாகும்.

விளாம்பழம் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் நல்லதாகும். கூடுதலான இரத்தப் போக்கு, வெள்ளைபடுதல் போன்றவற்றுக்கு விளாம்பழக் கோதின் அடியில் உள்ள பிசினை பாலில் கலந்து குடித்தால் குணமாகும். அதோடு பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றுக்கும் விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.

கருத்து தெரிவிக்க