வெளிநாட்டு செய்திகள்

வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் : மோடி

ஜப்பானின் ஒசாகா வில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர். “7 மாதங்களுக்குப் பின் இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. கடந்த முறை இங்கு வந்த போது ஜப்பானில் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. எனது நண்பர் சின்ஷோ மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவரை தேர்ந்தெடுத்தீர்கள். தற்சமயம் என்னையும் உலகின் மிகப்பெரிய நாடு தேர்வு செய்துள்ளது. அந்நாட்டின் தலைவராக இங்கு வந்துள்ளேன்.

மேலும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அரசாங்கம் இரண்டாவது முறையாக முழு பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.  வளர்ச்சி என்பது தான் எல்லோரினதும் தாரக மந்திரம். எனவே எல்லோரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தி சென்று கொண்டிருக்கிறோம். இந்திய, ஜப்பான் உறவு என்பது தனித்துவம் வாய்ந்தது. இந்தியாவின் வளர்ச்சியில் ஜப்பானுக்கு முக்கிய இடமுண்டு.” என்று கூறினார்.

கருத்து தெரிவிக்க