ரஷ்யாவின் பிரியாத்தியா பிரதேசத்தில் உள்ள நில்நியான்காஸ்க் விமான நிலையத்தில் இருந்து யூலன் ஊடேவுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 2 விமானிகளும் 43 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்ததால் விமானிகள் உடனடியாக நில்நியான்கஸ்க் விமான நிலையத்திற்கு திருப்பி தரையிறக்கினர். அப்போது ஓடு பாதையில் இருந்து வழுக்கி 100 மீற்றர் தூரத்திற்கு சென்ற விமானம், அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டதில் 43 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர். விமானிகள் 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். பயணிகளில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கருத்து தெரிவிக்க