கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதால் முஸ்லீம் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் அதற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லீம் மக்களுக்கோ நல்லதல்ல.
உண்மையில் தமிழ் முஸ்லீம் மக்களிடைய பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை நாங்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார் .
யாழ். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்முனைப் பிரச்சனைப் பிரேமதாஸ காலம் தொட்டு இருந்து வருகின்ற பிரச்சனை.
இதை எதிர்த்து நிற்கக் கூடிய முஸ்லீம் சமூகத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் நேரடியாக வரப்போவதில்லை. அவ்வாறான பாதிப்புக்கள் அவர்களுக்கு எதுவுமே கிடையாது.
அந்தப் பகுதிகளிலே ஒரு தமிழ்ப் பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டு செயற்படுவதன் மூலம் அங்கு தங்களுடைய இருப்பை பரவலாக்கி கொள்வதற்கு அல்லது ஆக்கிரமித்துக் கொள் தடைகள் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் அவர்கள் இதனை எதிர்க்கின்றார்கள் என்று நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க