சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று 27ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடுகிறது.
இன்றைய அமர்வில் அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெற்று மாலை 6.30க்கு வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
அத்துடன், தரம் ஒன்றுக்காக பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க