ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்க வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (26) கொழும்பில் நடைபெற்றது.
மரண தண்டனையை அமுல்படுத்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
கூட்டத்தின் இறுதியிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டு, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க