ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்துள்ளார். எதிர்வரும் 28-29 ஆம் திகதிகளில் ஜி 20 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று ஜப்பான் சென்றடைந்தார். ஒசாகா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், மகளிருக்கு அதிகாரமளித்தல், செயற்கை நுண்ணறிவு, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உட்பட பொது நலன்கள் ஆகியவை தொடர்பில் விவாதிக்கப்படும்” என பிரதமர் மோடியின் வெளிநாட்டு விஜய அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஆர்ஜண்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கருத்து தெரிவிக்க