வெளிநாட்டு செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா..?

ஈரான் மீது அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்தது.

இந்நிலையில் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டு கடைசி நேரத்தில் திட்டத்தை கைவிட்டார். எனினும் இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் பொக்ஸ் பிஸ்னஸ் நியூசுக்கு  அளித்த செவ்வியில் ட்ரம்பிடம்       “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நாங்கள் போர் தொடுக்க மாட்டோம் என நம்புகிறேன். ஆனால் ஏதேனும் நடந்தால் நாங்கள் வலுவான நிலையில் இருக்கின்றோம். அப்படி போர் நடந்தால் அது நீண்ட காலம் நீடிக்காது.” என் பதிலளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க