அழகு / ஆரோக்கியம்

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்

பெண்களின் சருமம் மிகவும் மிருதுவானதும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பதும் தெரிந்ததே. 40 வயதை அடைந்ததும் முகத்தில் ஆங்காங்கே சுருக்கங்கள் தென்படும். அதுமட்டுமல்லாது சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி முதுமைத் தோற்றத்தை பெற்று விடும். இத்தகைய தோற்றம் ஆரம்பித்த பின்னர் அதனை போக்குவதற்கு பலர் அழகு நிலையத்தை நாடுகின்றனர். ஆனால் அவ்வாறு செல்வதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுருக்கங்களை நீக்கி இளமைத் தோற்றத்தை பெறலாம்.

ஆமணக்கு எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கின் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் ஆங்காங்கே காணப்படும் பழுப்பு நிறத்தைப் போக்கலாம்.

கரும்புச் சாற்றில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து முகத்தில் பூசி வர சுருக்கங்கள் மறையும்.

அன்னாசி சாற்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட வேண்டும். இவ்வாறு கிழமையில் மூன்று தரம் செய்து வர முகத்தில் சுருக்கங்கள் மறையும்.

தேனைப் போன்ற சிறந்த மருந்து எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் தேனை முகத்தில் தடவி வர சுருக்கம் நீங்கி முதுமை தோற்றம் மறைந்து விடும். அதோடு கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் நீங்கும்.

கருத்து தெரிவிக்க